Connect with us

பெற்றோர்களே கவலையே வேண்டாம்! பாலிடெக்னிக் படிக்கும் மாணவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய்!!

polytecnic

தமிழகம்

பெற்றோர்களே கவலையே வேண்டாம்! பாலிடெக்னிக் படிக்கும் மாணவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய்!!

பெற்றோர்களே கவலையே வேண்டாம்! பாலிடெக்னிக் படிக்கும் மாணவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய்!!

கடந்த வாரம் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பலருக்கும் எதிர்பார்க்கப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றப்பட்டது. இதனால் மாணவிகளுக்கு ஆறாம் வகுப்பு முதல் அவர்களது வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் அவர்கள் உயர்கல்வி கற்க மிகவும் பிரயோஜனமாக இருக்கும் என்று ஸ்டாலின் கூறினார். இந்த நிலையில் தற்போது பாலிடெக்னிக் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.

அதன்படி பாலிடெக்னிக், ஐடிஐ சேரும் அரசு பள்ளி மாணவிகளுக்கும் மாதம்  ரூபாய் 1000  உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறினார். ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்துவிட்டு சேரும் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

மூவலூர் ராமாமிர்தம் உயர் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்று இன்று கூடிய சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். பாலிடெக்னிக் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கிடைக்குமா? என்ற பெற்றோரின் அச்சத்திற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்தார். உயர்கல்வி பெறும் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படுவது போன்று டிப்ளமோ மாணவிகளுக்கும் உதவித் தொகை உறுதி என அவர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top