பெற்றோர்களே உஷார்; 66 குழந்தைகள் உயிரிழப்பு… இந்த 4 மருந்துகளை பயன்படுத்த தடை!

மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் கடுமையான சிறுநீரக பாதிப்புகளால் 66 குழந்தைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு குழந்தைகளுக்கான மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதன்கிழமை WHO மருத்துவ தயாரிப்பு வெளியிட்ட எச்சரிக்கையின்படி, செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட தயாரிப்புகளில் டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் போன்ற நச்சு இரசாயனங்கள் காணப்பட்டன. இந்த இரசாயனங்கள் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சிறுநீர் கழிக்க இயலாமை, தலைவலி, மனநிலை மாற்றம் மற்றும் கடுமையான சிறுநீரகக் காயம் ஆகியவற்றை ஏற்படுத்தும், இது மரணத்திற்கு வழிவகுக்கும்” எனத் தெரிவித்துள்ளது.

குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தான இந்த நான்கு மருந்துகளும் இந்தியாவின் ஹரியானாவில் அமைந்துள்ள மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ப்ரோமெதாசின் வாய்வழி தீர்வு (Promethazine), குழந்தை இருமல் சிரப்பான கோஃபெக்ஸ்மாலின் (Kofexmalin), குழந்தைகளுக்கான இருமல் சிரப்பான மாகோஃப் (Makoff ) மற்றும் சளி மருந்தான மேக்ரிப் என் (Magrip N ) ஆகிய இருமல் மற்றும் சளி மருந்துகள் அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“WHO இந்தியாவில் உள்ள நிறுவனம் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் மேலும் விசாரணையை நடத்தி வருகிறது” என அதன் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆபத்தான மருந்து பொருட்கள் மற்ற நாடுகளுக்கும் விநியோகிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் உலக சுகாதார நிறுவனம், நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மேலும் தீங்கு விளைவிப்பதைத் தடுக்க அனைத்து நாடுகளும் இந்த தயாரிப்புகளை புழக்கத்தில் இருந்து அகற்றுமாறு பரிந்துரைந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment