பரந்தூரில் விமான நிலையம்: நாடாளுமன்றத்தில் திமுக கோரிக்கை!!

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணியை விரைவாக மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக எம்பி வில்சன் வலியுறுத்தியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னைக்கு இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இருப்பினும் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

திமுக நிர்வாகிகள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு..!!

குறிப்பாக நேற்றைய தினத்தில் விவசாய பிரதிநிதிகள் திமுக அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி இருந்தனர். இந்த சூழலில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய திமுக எம்பி வில்சன் நாட்டின் வளர்ச்சிக்கு தமிழகம் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தார்.

இதன் காரணமாக உலக தரமான விமான நிலையம் தேவை எனவும், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். சென்னை விமான நிலையம் சர்வதேச தரத்தில் இல்லை என கூறினார்.

50 பைசாவிற்கு பால் பாக்கெட்: அலைமோதிய கூட்டத்தினால் பரபரப்பு..!!

இதனால் பெரும் பொருளாதார ரீதியான இழப்பீடு ஏற்படுவதாகவும், தென்னிந்தியாவின் பொருளாதர மையமாக சென்னையை மாற்றக்கூடிய வகையில் புதிய விமான நிலைய பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், புதிய விமான நிலையம் அதிநவீன வசதிகளுடன் அமைய வேண்டுமெனவும் திருச்சி, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களை மேம்படுத்தக்கூடிய பணிகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.