Connect with us

பரந்தூர் புதிய விமான நிலையம்!! – விசிக கருத்து கேட்பு!!

thirumavalavan e1663219167325

தமிழகம்

பரந்தூர் புதிய விமான நிலையம்!! – விசிக கருத்து கேட்பு!!

பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அப்பகுதி மக்களிடம் விசிக தலைவர் திருமாவளவன் கருத்து கேட்டு வருகிறார்.

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூரில் சென்னை 2-வது விமான நிலையம் அமையவுள்ளதாக மத்திய, மாநில அரசு அறிவித்திருந்தது. குறிப்பாக 400 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மகாதேவி மங்கலம், சிங்கிலி பாடி, ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் அப்பகுதி மக்களை நேரில் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் கருத்து கேட்பு கூட்டன் நடத்தினார்.

அப்போது புதிய விமான நிலையம் அமைந்தால், விவசாயத்தை நம்பியிருக்கும் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அதே போல் 150-க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த இந்து கோயில்கள் அழிக்கப்படும் எனவும், உயிரே போனாலும் எங்கள் நிலத்தை விட்டுக்கொடுக்க போவதில்லை என விசிக தலைவர் திருமாவளவனிடம் பொதுமக்கள் கூறினர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top