பரந்தூரில் விமான நிலையம்!! அனைத்தும் விளை நிலங்கள் – விவசாய பிரதிநிதிகள்!!

சென்னையை அடுத்த இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூர் பகுதியில் 13 கிராமங்களை உள்ளடக்கிய 4,500 ஏக்கர் பரப்பளவில் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்காக அரசாணை வெளியிடப்பட்டு அதற்கான பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவதில் அப்பகுதியில் வாழும் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்றைய தினத்தில் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு, ஏ.வா வேலு, தா. மோ.அன்பரசன், 13 கிராமங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.

அதிர்ச்சி! மாணவனை கொன்ற ஆசிரியர்.. கர்நாடகாவில் பயங்கரம்!!

இந்த பேச்சுவார்த்தைகளுக்கு பின் பல்வேறு கட்ட முடிவுகள் எடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் அமைச்சர்களுடனான ஆலோசனைக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விவசாய பிரதிநிதிகள் தற்போது தேர்வு செய்யப்பட்ட நிலங்கள் அனைத்தும் விளை நிலங்கள் என கூறினர்.

இதனால் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான சூழல் இல்லை என்றும் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் நீரோடைகள் இருப்பதால், அவற்றை மறிக்கும் பட்சத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்ப அதிக வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
மீண்டும் வெடித்தது ஹலால் சான்று விவகாரம்: கர்நாடகாவில் பரபரப்பு!!

ஏற்கனவே நிலம் கையகப்படுத்துவதில் பொதுமக்களுக்கு சந்தை மதிப்பீட்டை விட கூடுதாக பணம் , வீடுகள் கட்டுதல் போன்றவைகளுக்கு அரசே முன் நின்று செய்து தரப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.