பரந்தூர் விமான நிலையம்: பொதுமக்களின் பேரணி நிறுத்தம்..!!!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் புதிய விமான நிலையம் அமைக்கப்படுவதால் பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்கள் பாதிக்கப்படும் என மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும் வருகின்ற 2069- 70 ஆண்டுகளில் எதிர்கால போக்குவரத்தினை கருத்தில் கொண்டு கட்டாயம் விமான நிலையம் அமைக்கப்படும் என மாநில, மத்திய அரசுகள் வலியுறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக கிராம மக்கள் அனைவரும் பேரணி நடத்துவதாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர்.

பீகாரில் பரபரப்பு!! திறப்பு விழாவிற்கு முன்பே இடிந்த பாலம்..!!

அந்த வகையில் இன்றைய தினத்தில் ஏகனாபுரம் கிராமத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கையில் கருப்பு கொடி ஏந்தி பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி புறப்பட்டனர். அப்போது விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த சூழலில் ஏகனாபுரம் கிராமத்தில் இருந்து பேரணியாக சென்ற பொதுமக்களை ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவண கண்ணன் அவர்களை தடுத்து நிறுத்தினார்.இதுகுறித்து நடிவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் கூறினார்.

மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருப்பதற்காக அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.