பரந்தூர் புதிய விமான நிலையம்: அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!!

புதிய விமான நிலையம் அமைய உள்ள சுற்றுவட்டார பகுதியை மேம்படுத்த உயர்மட்ட தொழில்நுட்ப குழு அமைக்கப்படும் என்றும் அந்த குழு அளிக்கும் பரிந்துரைகளின் படி தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் சென்னை அடுத்துள்ள பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. குறிப்பாக 2028ம் ஆண்டிற்குள் புதிய விமான நிலையம் அமைக்க படாத சூழலில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படும் என கூறியுள்ளார்.

இந்நிலையில் புதிய விமான நிலையம் அமையும் இடத்தில் நீர் ஓட்டம் எந்தவித தடையும் இன்றி தமிழ்நாடு அரசால் தொடர்ந்து பராமரிக்கப்படும் என்றும் இதற்காக புதிதாக தொழில்நுட்ப குழு அமைக்கப்பட இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார். அதோடு புதிய விமான நிலையம் அமைப்பதற்கு விவசாயிகள் நிலம் கொடுத்து இருப்பதால் கூடுதலாக அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என கூறியுள்ளார்.

புதிய விமான நிலையம் மூலமாக அதன் சுற்றுப்புற கிராம மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவது மட்டுமின்றி, விமான நிலையம் மூலம் உருவாகும் அனைத்து பொருளாதார பலன்களும் கிடைக்கும் என கூறியுள்ளார்.

அதோடு ஒவ்வொரு 100 நேரடி வேலை வாய்ப்புக்கும் 610 நபர்களுக்கு மறைமுக வேலை வாய்ப்பு கிடைக்க தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாகவும், இதன் மூலம் பல மடங்கு அதிகமாக தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி அடையும் என கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.