பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட கோரி ஏகனாபுரம் கிராமசபை கூட்டத்தில் அதிகாரிகளின் எதிர்ப்பை மீறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
லடாக் செல்ல திட்டம்… டிடிஎப் வாசன் அடுத்த பிளான்..!!!
இந்நிலையில் பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் 67-வது நாளை எட்டியுள்ளது. இந்த சூழலில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஏகனாபுரம் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஏற்கனவே இந்த தீர்மானம் கொண்டுவர அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தால், அவர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். அதோடு மாவட்ட ஆட்சித்தலைவருடன் பேசிய வேண்டி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நான் ஒசில் வர மாட்டேன்.. அவதூறு பரப்பியதாக மூதாட்டி உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு!!
ஆனால் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டுமே பிரச்சனைகளைக்கு தீர்வு கிடைக்கும் என கூறிய அவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.