பரந்தூர் விமான நிலையம் – போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!!

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராட்டக்குழுவினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த நிலையில், தற்காலிகமாக போராட்டம் வாபஸ் பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பரந்தூர் விமான நிலையத்திற்கு 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், பொதுமக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். குறிப்பாக புதிய விமான நிலையம் அமைந்தால் விவசாயம் பாதிக்கப்படும் என கருத்து தெரிவித்து வந்தனர்.

சென்னையை உலுக்கிய சத்யாவின் கொலை – சதீஷுக்கு கூடுதல் பாதுகாப்பு..!!

இந்நிலையில் போராட்டம் நடத்துவதற்கு குழு அமைக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர்களுடன், அமைச்சர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.

இதனிடையே விமான நிலையம் அமைப்பது குறித்து அரசு தரப்பில் நல்ல முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளனர். அதோடு முதல்வருடன் கலந்து ஆலோசித்து மாற்று திட்டத்தை செயல்படுத்துவோம் என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.

மலைபோல் குறையும் தங்கம் விலை: குஷியில் அள்ளிச் செல்லும் நகை பிரியர்கள்..!!

இந்த சூழலில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் சட்டப்பேரவை நோக்கிய நடைபயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட நிலையில், தற்போது தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment