Connect with us

துணை மருத்துவ படிப்பு-நாளை முதல் ஆன்லைன் விண்ணப்பம்!

doctor

தமிழகம்

துணை மருத்துவ படிப்பு-நாளை முதல் ஆன்லைன் விண்ணப்பம்!

மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வாண நீட் தேர்வு இந்த மாதம் நடைபெற்ற முடிந்தது. இதில் பல இடங்களில் மாணவ மாணவிகள் பரிசோதனை என்ற பெயரில் அல்லல் பட்டனர். மேலும் பல இடங்களில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கண்டறியப்பட்டனர்.

இந்த நிலையில் நாளைய தினம் முதல் மற்றும் ஒரு படிப்பிற்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடங்குவதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் துணை மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் நாளை முதல் தொடங்குகிறது.

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் தொடங்கி பன்னிரண்டாம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. துணை மருத்துவ படிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கான விண்ணப்பங்களை பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 12ம் தேதி மாலை 5 மணி வரை தான் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய கால அவகாசம் தரப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top