Connect with us

முக்கிய நகரங்களில் முடங்கிய ஏடிஎம்! பணப்புழக்கமின்றி தவிக்கும் மக்கள்!!

arm

News

முக்கிய நகரங்களில் முடங்கிய ஏடிஎம்! பணப்புழக்கமின்றி தவிக்கும் மக்கள்!!

முக்கிய நகரங்களில் முடங்கிய ஏடிஎம்! பணப்புழக்கமின்றி தவிக்கும் மக்கள்!!

தற்போது ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் புரிந்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக உக்ரைன்  நாட்டின் தலைநகரான கீவ் பகுதியை கைப்பற்றும் நோக்கத்தில் அதிதீவிரமாக ரஷ்யா போர் புரிந்து கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ரஷ்ய போரின் காரணமாக பங்குச் சந்தையில் அதிக அளவு வீழ்ச்சி நிகழ்ந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் தங்கம், வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் உக்ரைனில் போர் காரணமாக விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதாக தமிழக மாணவர்கள் கூறியுள்ளனர். இத்தகைய பொருளாதார முடக்கத்தில் உக்ரைன்  நாட்டின்  முக்கிய நகரங்களில் ஏடிஎம் மையங்கள் முடங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி உக்ரைன்  நாட்டின் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள வங்கிகளில் ஏடிஎம் மையங்கள் முடங்கின. நீண்ட வரிசையில் காத்திருந்து வங்கிகளின் ஏடிஎம் மையங்கள் முடங்கியதால் பணம் எடுக்க முடியாமல் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

வங்கிகள் மூடப்பட்ட நிலையில் ஏடிஎம்களும் முடங்கியதால் பணப்புழக்கம் இன்றி விலைவாசி உயர்ந்துள்ளது. கிரெடிட் கார்டு உள்பட பணபரிவர்த்தனை தடைபட்டதால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top