Connect with us

பாரா ஒலிம்பிக்: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்!

Sports

பாரா ஒலிம்பிக்: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்!

99f009e6f66190e96832dc1e2433e8ff

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இந்தியாவை சேர்ந்த ஹர்விந்தர் சிங் வில்வித்தை போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார் 

பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங் மற்றும் விவேக் சிகாரா ஆகிய இருவரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தகுதி பெற்றிருந்த நிலையில் காலிறுதிக்கு ஹர்விந்தர் சிங் மட்டும் முன்னேறினார்.

அவர் கால் இறுதியில் ஜெர்மனி வீரரை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார் என்பதும், அரையிறுதி போட்டியில் அமெரிக்க வீரரை  எதிர்த்து விளையாடிய நிலையில் 6-4 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் வெண்கலப் பதக்கத்தை விளையாடும் வாய்ப்பு ஹர்விந்தர் சிங்கிற்கு கிடைத்தது. இந்த நிலையில் சற்று முன் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஹர்விந்தர் சிங், தென்கொரிய வீரரை வென்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் முறையாக வில்வித்தை பிரிவில் பதக்கம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா தற்போது இரண்டு தங்கம் 6 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கம் என 13 பதக்கங்களை வென்றுள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top