பாரா ஒலிம்பிக் போட்டி: இந்தியாவுக்கு ஒரே நாளில் 4 பதக்கங்கள்!

1160edfefd80d252ccdc0f82be20ac98

பரா ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே இந்தியாவுக்கு மூன்று பதக்கங்கள் கிடைத்துள்ளன நிலையில் இன்று ஒரே நாளில் நான்கு பதக்கங்கள் கிடைத்துள்ளது இந்தியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

இன்று நடைபெற்ற 10 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த அவானி லெகாரா என்பவர் தங்கப்பதக்கம் வென்றார். இதனை அடுத்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

d91857604779bd4dfcbc6a3fcf9625fb

அதேபோல் இன்று நடைபெற்ற வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் யோகேஷ் கதுன்யா என்பவர் வெள்ளிப்பதக்கம் வென்றார். அவர் 44.3 8 மீட்டர் தூரம் வட்டு எறிந்து என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இன்று நடந்த பாராலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவை சேர்ந்த வீரர்கள் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை பெற்றனர். இந்தியாவின் தேவேந்திர ஜஜாரியா என்பவர் வெள்ளிப் பதக்கத்தையும் சுந்தர்சிங் குர்ஜார் என்பவர் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளனர். இதனை அடுத்து இந்தியாவுக்கு இன்று ஒரே நாளில் நான்கு பதக்கங்கள் கிடைத்தது அடுத்து மொத்தம் 7 பதக்கங்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment