Connect with us

ஓ.பன்னீர்செல்வத்துக்கு நடந்த கொடுமை! வரவேற்பு பதாகைகளில் அவரின் படம் முற்றிலும் புறக்கணிப்பு!!

ஓபிஎஸ்

தமிழகம்

ஓ.பன்னீர்செல்வத்துக்கு நடந்த கொடுமை! வரவேற்பு பதாகைகளில் அவரின் படம் முற்றிலும் புறக்கணிப்பு!!

இன்றைய தினம் அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் மீண்டும் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்குக்கு இன்று தான் தீர்ப்பு வெளியாக உள்ளது.

இதனால் அதிமுக தொண்டர்கள் பலரும் ஓ.பன்னீர்செல்வத்தின் மீது அதிருப்தியை தெரிவித்துக் கொண்டு வருகின்றனர். அதுவும் குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக செயல்பட்டு கொண்டு வருகின்றனர்.

அதன் எதிரொலியாக இன்று நடக்கின்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஒரு படம் கூட பேனர்களில் இடம்பெறவில்லை. அதிமுக பொதுக்குழு வரவேற்பு பாதகைகளில் பன்னீர்செல்வத்தின் படம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த பொதுக்குழுவின் போது வரவேற்பு பதாகைகளில் பழனிச்சாமி பன்னீர்செல்வத்தின் படங்கள் இடம் பெற்றிருந்தன. தற்போது வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பாதகைகளில் பழனிச்சாமியின் படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

இதனால் பொதுக்குழு கூட்டத்தில் கண்டிப்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்பது தெள்ளத் தெளிவாகி விட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top