பஞ்சபூத சக்திகளை பெற்றுத்தரும் பஞ்சதீப எண்ணெய்

எங்கும் விளக்கேற்றுவது பொதுவாக நன்மையை தரும் ஒரு விசயமாகும். கோவில்களில் வீடுகளில் விளக்கேற்றினால் அது மிகப்பெரும் சுப பலன்களை பெற்றுத்தரும்.

விளக்கேற்றும்போது பொதுவாக நாம் நல்லெண்ணெய் அல்லது நெய்யில் விளக்கேற்றுவோம் அப்படியல்லாமல் பஞ்சக்கூட்டு எண்ணெய்யில் விளக்கேற்றுவது சிறப்பை தரும்.

பசுநெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய இந்த ஐந்தும் கலந்த பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி ஐந்து முகம் விளக்கேற்றினால் நற்பலன்களை பெறலாம்,

பஞ்சமி திதியில் ஐந்து முக விளக்கேற்றி ஐந்து எண்ணெய் கலந்து வராஹியை வழிபடலாம்.

பஞ்ச கூட்டு எண்ணெயில் விளக்கேற்றுவதால் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகம் நடக்கும்.வீட்டில் மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மறையும்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print