சாஸ்தா, குலசாமி, பரிவார தெய்வங்களோடு களைகட்டும் பங்குனி உத்திர திருவிழா

சாஸ்தா என்றதுமே நம் நினைவுக்கு வருபவர் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் தான் நம் நினைவுக்கு வருகிறது. ஆனால் தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் ஏகப்பட்ட சாஸ்தா கோவில்கள் உள்ளன. இவை நம் முன்னோர்கள் தொன்று தொட்டு வழிபடும் கோவில்கள். காலம் காலமாக இருந்து கொண்டுள்ளது.

அத்தனை சாஸ்தா கோவில்களுக்கும் மூத்த முதல் கோவில் காரையாறு சொரிமுத்து அய்யனார் சாஸ்தா தான். அப்புறம் பூலுடையார் சாஸ்தா, பட்டமுடையார் சாஸ்தா, செங்கொடி சாஸ்தா, பொன்பெருமாள் சாஸ்தா, பாடகலிங்க சாஸ்தா, மகாலிங்க சாஸ்தா, திருவுடையார் சாஸ்தா, வென்னி உடையார் சாஸ்தா, மயிலேறும் சாஸ்தா, புங்கமுடையார் சாஸ்தா, சுந்தரபாண்டியார் சாஸ்தா, குறுந்தொடையார் சாஸ்தா, பொய்சொல்லான் மெய்யன் சாஸ்தா, அருஞ்சுனை காத்த அய்யனார் சாஸ்தா, கற்குவேல் அய்யனார் சாஸ்தா, வெயிலுகந்த சாஸ்தா, நல்லதம்பி சாஸ்தா, கருங்குழி சாஸ்தா, பெரும்படை சாஸ்தா, துரையப்ப சாஸ்தா என ஏகப்பட்ட சாஸ்தா கோவில்கள் உள்ளன.

Sastha2
Sastha2

நம்ம முன்னோர்கள் அத்தனை சாஸ்தாக்களுக்கும் சுத்தமான தமிழ்ப்பெயர்களை வச்சிருக்காங்க. நம்ம முன்னோர்கள் எல்லாரும் எந்தப் பண்டிகையைக் கொண்டாடினாலும் சரி. கொண்டாடா விட்டாலும் சரி. சாஸ்தா கோவிலுக்கு பங்குனி உத்திரம் அன்னைக்கு போய் கட்டாயமாக ஆஜர் ஆயிடுவாங்க.

Ayyanar
Ayyanar

பெரும்பாலான சாஸ்தா கோவில்களில் அவரோட 2 மனைவிகளான பூரணா தேவி, புஷ்கலா தேவியோட காட்சி கொடுப்பார். பரிவார தெய்வங்களாக மாடசாமி, சங்கிலி பூதத்தார், சப்பாணி மாடன், உதிர மாடன், அக்கினி மாடன், துண்டி மாடன், கரடி மாடன், பேச்சி, பிரம்மசக்தி, பட்டவராயன், வன்னியராஜா, முன்னடி மாடன், கழுமாடன், தளவாய்மாடன், பலவேசக்காரன், கருப்பசாமி, முனியாண்டி என ஏகப்பட்ட சாமிகள் உள்ளன.

Iyappan
Iyappan

ஐயப்பன் தான் முதல் தமிழ் சாமி. பாண்டிய வம்சத்து வாரிசா வாழ்ந்தவரு. வடமாவட்டத்துல இந்த சாஸ்தா சாமிக்கு அய்யனாருன்னு பேரு. 21 முக்கியமான காவல் தெய்வங்கள், 61 குலசாமிகளோடு இருந்து அவர்களுக்குத் தலைவராக இருப்பவர் தான் இந்த சாஸ்தா.

இந்த சாஸ்தா கோவில்ல தான் எல்லா சமூகத்துல உள்ளவங்களும் வந்து சாமி கும்பிடுவாங்க. பெரும்பாலான சாஸ்தா கோவில்ல அரிவாள், தடி, கிடா வெட்டச் சொல்ற சாமி என கும்பிடுற பரிவார தெய்வங்களைக் குலசாமிகளாகவும் வச்சிருப்போம். அதோடு சேர்த்து நம்ம சாஸ்தாவையும் கும்பிட்டு வருவோம்.

சிலர் குலதெய்வம் வேற. காவல் தெய்வம் வேறன்னு சொல்வாங்க. சுடலை மாடன், கருப்பசாமி, முனீஸ்வரன், தளவாய்மாடன் இவங்க தான் காவல் தெய்வங்கள். இவங்களுக்கு எல்லாம் மேல இருந்து ஆட்சி செய்றவரு தான் சாஸ்தா.

Sastha koil 3
Sastha koil 3

சாஸ்தா வேற இடத்துல இருந்தும் இவர்களை எல்லாம் ஆட்சி செய்வார். அதனால அவர் தான் நம்மோட குலசாமி. மற்ற தெய்வங்கள் எல்லாம் காவல் தெய்வங்கள்னு சொல்வாங்க.

அதனால காலம் காலமாக குலசாமி வழிபாடு என்று சொல்கிறோம் அல்லவா. அவர் தான் சாஸ்தா. பங்குனி உத்திரம் அன்று தென்மாவட்டங்களுக்குச் சென்று பார்த்தால் விடிய விடிய கூட்டம் களை கட்டும். பங்குனி உத்திரம் அன்று வழக்கமாக திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை கொடுப்பாங்க.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் 2500 முதல் 3000 வரையிலான சாஸ்தா கோவில்கள் உள்ளன. பெரும்பாலான கோவில்கள் ஊருக்கு வெளியேயும், குன்றுகளிலும், காட்டுப்பகுதி, குளத்தங்கரை, ஆற்றங்கரைகளில் இருக்கும்.

Sorimuthu Ayyanar
Sorimuthu Ayyanar

முன்னோர்கள் கிட்ட இருந்து எனக்கு குலசாமி யாரு, சாஸ்தா யாருன்னு தெரியல. நான் எப்படி வழிபடுறதுன்னு கவலைப்படுறவங்களுக்கும் ஒரு கோவில் இருக்கு. அது காரையாறு பக்கத்துல உள்ள சொரிமுத்து அய்யனார் கோவில். இவர் தான் சாஸ்தா தெரியாதவங்களுக்கு ஒரே சாஸ்தா. ஆதி சாஸ்தா. சென்னை, சுற்றுப்புறம் உள்ளவர்களுக்கு ஆவடி போற வழியில் வேப்பம்பட்டுங்கற இடத்தில் அஷ்டசாஸ்தா இருக்கு.

இந்தக் கோவில்ல சாஸ்தாவுடைய 8 வடிவங்களையும் பார்த்து தரிசிக்க முடியும். அதனால வருடத்துக்கு ஒரு முறை வரும் இந்த பங்குனி உத்திரத்துல மறக்காம நம்ம குலதெய்வத்தை வழிபட்டு குடும்பத்தைக் கட்டிக் காப்போம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews