தென்மாவட்டங்களில் களைகட்டும் பங்குனி உத்திரம்..! எப்போ, எப்படி வழிபடுறதுன்னு பார்ப்போமா…

தமிழ்மாதங்கள் 12. நிறைவான மாதம் பங்குனி. 12வது நட்சத்திரம் உத்திரம். இரண்டும் இணையும் காலம் பங்குனி உத்திரம். அதுவும் பௌர்ணமி அன்று வருகிறது. இது கல்யாண வரத்தை அருளக்கூடிய நாள் அதனால் கல்யாண வர்த்தநாள் எனலாம்.

தமிழகம் முழுவதும் இந்தத் திருநாள் கொண்டாடப்பட்டாலும், தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் களைகட்டி வருகிறது. இன்று மகாவீர் ஜெயந்தியும் சேர்ந்து வந்து அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Panguni uthiram1
Panguni uthiram1

எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்வதைக் காண முடிகிறது. பங்குனி உத்திரம் இன்றா (ஏப்.4) நாளையா (ஏப்.5) என்று மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. காலண்டரில் ஏப்.5 தான் போடப்பட்டுள்ளது. ஆனால் ஏப்.4ம் தேதி அன்றே காலை 10.29 மணிக்கு உத்திரம் நட்சத்திரம் வந்து விடுகிறது.

இரவு கோவிலில் தங்க வேண்டும் என்பதற்காக பெரும்பாலானோர் இந்த நாளையே கடைபிடித்து வருகின்றனர். இந்த உத்திரம் நட்சத்திரமானது மறுநாளான ஏப்.5ல் காலை 12.01 மணி வரை உள்ளது. மறுநாள் பௌர்ணமியும் சேர்ந்து வருவதால் இந்த நாளில் வழிபட வேண்டும் என்று சொல்கின்றனர்.

அந்த வகையில் அதிசிறப்பு வாய்ந்த இந்த நன்னாளில் எந்த நேரத்தில் எப்படி வழிபடுறதுன்னு பார்ப்போமா…!

பங்குனி உத்திரம்

சிவபெருமானுக்கும், அம்பிகைக்கும், நாராயணருக்கும் மகாலட்சுமிக்கும், ராமருக்கும் சீதைக்கும் திருமணம் நடந்த நாள். சிவபெருமான், பெருமாள், முருகன் கோவில்களில் தவறாமல் நடைபெறக்கூடிய திருநாள் இந்த பங்குனி உத்திர நாள் தான்.

வழிபட வேண்டிய நேரம்

ஏப்ரல் மாதம் 5ம் தேதி பங்குனி உத்திரம். உத்திரமும் இருக்கணும். பௌர்ணமியும் இருக்கணும். அன்னைக்கு இந்த இரண்டுமே வருது.காலை 10.16 மணிக்கு மேல் தான் பௌர்ணமி. அன்று மதியம் 12.09 மணி வரை தான் உத்திரம் நட்சத்திரம்.

அதனால் இரண்டும் இணைந்திருக்கிற இந்த நேரத்தில் வழிபடுவது அதிவிசேஷம். இந்த நேரத்தில் ஆற்றல் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தினால் தான் நேரத்தைத் தேர்வு செய்கின்றனர்.

அதனால் அன்றைய தினம் 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் நாம் வழிபட்டால் அதிவிசேஷமான பலனை நமக்குப் பெற்றுத்தரும்.

மகிமைகள்

இது கல்யாணத்திற்காக காத்திருக்கும் மணமகன், மணமகள் அவசியம் கடைபிடிக்க வேண்டிய விரத நாள். நல்ல வரன் வர வேண்டும் என்பதே உங்களது பிரார்த்தனையாக இருக்க வேண்டும்.

இந்த நாளில் விரதம் இருப்பது நல்லது. முருகப்பெருமான் படத்திற்கு சந்தனம், குங்குமம், செவ்வரளி பூ மாலை போடலாம். முருகப்பெருமான் தெய்வாணையை மணந்த நாள் இதுதான். திருமணம் நடைபெற உள்ளவர்கள் திருப்புகழைப் பாராயணம் செய்து கொள்ளலாம்.

சர்க்கரைப் பொங்கல், பாயசம், 2 வாழைப்பழம் வெத்தலைப்பாக்கு, ஒரு டம்பளர் பால், தேனோ நாட்டுச்சர்க்கரையோ அதில் கலந்து விடுங்கள்.

கல்யாணம் ஆக…

Sumangali thaanam
Sumangali thaanam

திருமணம் ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் சுமங்கலிகளுக்கு வஸ்திரம் கொடுக்கலாம்.

ஒரு ஜாக்கெட் பிட், 2 முழம் பூ, 2 வாழைப்பழம், வெத்தலைப்பாக்கு, மஞ்சள், 1 அல்லது 10 ரூபாய், தேங்காய் என 2 பேருக்காவது கொடுத்து வீட்டுக்கு அருகிலோ, கோவிலுக்கோ சென்று கொடுக்கலாம். கல்யாணம் ஆக வேண்டும் என்று பிரார்த்தனை செய்யும் பையனோ, பொண்ணோ இதைக் கொடுக்கலாம்.

இன்று முருகப்பெருமானுக்கு உகந்த நாள். முருகப்பெருமான் கோவில்களில் அனைத்தும் கூட்டம் களைகட்டும். பழனியில் அதிவிசேஷமாக பூஜைகள் எல்லாம் நடக்கும். அதனால் முருகப்பெருமானையும் வழிபட பக்தர்கள் கூட்டம் கூட்டமாகச் செல்வர். நாமும் வழிபட்டு வளமும், நலமும் பெறுவோமாக..

இனிய பங்குனி உத்திர திருநாள் நல்வாழ்த்துக்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews