Connect with us

அகோரியாக மிரட்டும் ஜாக்கி ஷெராஃப்- பாண்டி முனியின் கதை

பொழுதுபோக்கு

அகோரியாக மிரட்டும் ஜாக்கி ஷெராஃப்- பாண்டி முனியின் கதை

ஜாக்கி ஷெராஃப் தற்போது அகோரி வேடத்தில் நடித்து வருகிறார். பிரபல ஹிந்தி நடிகரான இவர் தமிழில் தியாகராஜன் குமாராராஜா இயக்கத்தில் வந்த ஆரண்ய காண்டம் படத்தில் முக்கிய ரோலில் நடித்தவர்.

3d3632473551b662c700c56c32d751d7

இப்படம் ஜாக்கி ஷெராப்புக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அப்படத்தில் ஜாக்கி ஷெராஃப் பிரபல பாடலான இளையராஜா இசையமைத்த வா வா பக்கம் வா பாடலுக்கு ஆடிக்கொண்டே மாடிப்படிகளில் ஏறி செல்வதை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் தமிழில் நடிக்கிறார். கஸ்தூரி ராஜா இப்படத்தை இயக்குகிறார். படத்தின் பெயர் பாண்டி முனி. நீண்ட காலங்களாக கஸ்தூரி ராஜாவும் சினிமாக்களை இயக்குவதில்லை இப்போதுதான் இயக்கி வருகிறார்.

நீண்ட நாள் கழித்து கஸ்தூரி ராஜா படம் என்பதாலும் ஜாக்கி ஷெராஃப் நடிக்கும் படம் என்பதாலும் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பார்ப்பவர்கள் பயப்படும் வண்ணம் மிக பயங்கரமான அகோரி வேடத்தில் ஜாக்கி ஷெராஃப் இப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top