நம் தமிழகத்தில் பிப்ரவரி மாதம்தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதற்கு முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் நடைபெற்றது.
இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் தற்போது தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில்திடீரென்று கண்டமங்கலம் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அதன்படி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கண்டமங்கலம் ஊராட்சி மன்ற துணை தலைவர் சரண்யா கைது செய்யபட்டுள்ளார். ஏனென்றால் கிராம சபைக் கூட்டத்தின் போது திடீரென்று எழுந்த அவர் துணை வட்டார வளர்ச்சி அலுவலரை காலணியை கொண்டு அடித்துள்ளார்.
இதனால் அவர் மீது குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளது. எனவே துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அளித்த புகாரில் ஊராட்சி மன்ற துணை தலைவர் சரண்யா கைது செய்யப்பட்டுள்ளார். பாகுபாடு காட்டினால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.