
Tamil Nadu
தற்கொலை செய்த ஊராட்சி செயலாளர்; திமுக கவுன்சிலரை கைகாட்டி கடிதம்!!
தற்போது கிராம ஊராட்சி செயலாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக கடிதத்தில் திமுக கவுன்சிலர் மீது புகார் எழுதி வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே ராமநாயினிகுப்பம் கிராம ஊராட்சி செயலாளர் ராஜசேகரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு திமுக ஒன்றிய கவுன்சிலர் ஹரி தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துள்ளார் ராஜசேகரன்.
ஊராட்சிக்கு வரும் நிதியை தரவேண்டுமென கவுன்சிலர் ஹரி வற்புறுத்தி வந்ததாக புகார் வந்துள்ளது. இதற்கு திமுக கவுன்சிலர் தற்கொலைக்கு நான் காரணமில்லை என்று கூறினார்.
வேலூர் ராமநாயினிகுப்பம் ஊராட்சி செயலாளர் ராஜசேகரன் மரணத்திற்கு நான் காரணமில்லை என்று கூறியுள்ளார். ஊராட்சி பணத்தை ராஜசேகரன் தான் மூன்று ஆண்டுகளாக கையாடல் செய்ததாக திமுக கவுன்சிலர் ஹரி தகவல் அளித்துள்ளார். ஊராட்சி செயலாளர் கையாடல் குறித்து ஊராட்சி தலைவர் பிடிஓவிடம் தகவல் கொடுத்தேன் என்றும் கவுன்சிலர் ஹரி கூறினார்.
