ஸ்டார்ட் பண்ணியாச்சு ரேஷன் கடையில் பனைவெல்லம்!தீபாவளி ஸ்பெஷல் பட்டுப் புடவை அறிமுகம்!!

இன்று காலை முதலே தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பற்றி அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகிக் கொண்டே வந்தன. முதலில் அவர் அரசுப் பேருந்துகளில் விசிட் செய்ய ஏறி அங்கு பெண்களிடையே இலவச பேருந்து பற்றி கருத்து கேட்டார்.ஸ்டாலின்

அதன் பின்னர் தடுப்பூசி முகாம் சென்று ஆய்வு செய்தார். இந்த நிலையில் தற்போது ரேஷன் கடைகளில் பனை வெல்லம் விற்பனையை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.

அதன்படி தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கற்பகம் பிராண்ட் பனைவெல்லம் விற்பனையை நம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

காதிகிராப்ட் பொருட்களை விற்பனை செய்ய tnkhadi செயலியை தொடக்கிவைத்தார் செயலிலும் மு க ஸ்டாலின். தீபாவளி சிறப்பு விற்பனைக்கான தமிழ்த்தறி என்ற புதிய ரக பட்டுப்புடவையை அறிமுகம் செய்தார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.

சாயல்குடியில் 65 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள பனை பொருள் பயிற்சி மையத்தை காணொலி மூலம் திறந்து வைத்தார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment