#Breaking பாமாயில் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு!

உளுந்தூர்பேட்டை அருகே பாமாயில் ஏற்றி சென்ற லாரி சாலை ஒர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து பாமாயில் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது, இந்த லாரியை முருகேசன் (48) என்பவர் ஓட்டிச் சென்றார்.

இன்று காலை உளுந்தூர்பேட்டை அடுத்த செம்பியன் மாதேவி என்ற இடம் அருகே லாரி சென்று கொண்டிருந்தபோது, திடீரென லாரி நிலை தடுமாறி சாலை ஓரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரியை ஓட்டி சென்ற டிரைவர் முருகேசன் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எலவனாசூர்கோட்டை காவல் நிலைய போலீசார், கிரேன் மூலம் விபத்துக்குள்ளான லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விபத்து தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment