பல்லாவரம் சந்தைக்கு போகும் மக்களே கொஞ்சம் உஷார்…!! நீங்க வாங்குறது திருட்டு பொருளாக கூட இருக்கலாம்;

நம் தமிழகத்திலேயே மிகவும் சீப்பான விலையில் அனைத்து விதமான பொருட்கள் கிடைக்கும் இடம் என்றால் அதனை பல்லாவரம் சந்தை என்று கூறலாம். இந்த பல்லாவரம் சந்தை வாரம் வெள்ளிக்கிழமை நடைபெறும்.

இங்கு வீட்டு உபயோக பொருட்கள் மட்டுமின்றி காய்கறிகள், மளிகை சாமான்கள், உடைகள், செருப்பு உள்ளிட்டவைகளும் விற்பனை செய்யப்படும். அதோடு மட்டுமில்லாமல் செல்லப் பிராணிகளான நாய், பூனை, மீன், கோழி உள்ளிட்டவைகளும் இங்கு மிக குறைவான விலையில் விற்பனை செய்யப்படும்.

இதனால் வெள்ளிக்கிழமை ஆனாலே பல்லாவரத்தில் சென்னை சுற்றியுள்ள அனைவரும் வருவது வாடிக்கையாக உள்ளது. இந்த பல்லாவரம் சந்தையில் ஒரு முகம் சுளிக்கும் செயல் ஒன்று நிகழ்ந்துள்ளது.

ஏனென்றால் அங்கு ஷூவிற்கும் ஒருவர் திருடி விற்பது தெரியவந்துள்ளது. சென்னையில் வீடுகளில் திருடும் ஷூக்களை பல்லாவரம் சந்தையில் விற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த திருடனை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்திக் கொண்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment