
செய்திகள்
எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்!! காரணம் என்ன?
நேற்றைய தினம் இரவிலேயே குடியரசுத் தலைவர் யார் என்பது உறுதியானது. ஏனென்றால் பாஜக கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்மு மூன்று சுற்றுகளிலும் முன்னிலையில் இருந்தார்.
இதனால் அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். அதன் வரிசையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று சந்தித்து அவருக்கு வாழ்த்தினை தெரிவித்தார்.
அதோடு மட்டுமில்லாமல் பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில் இன்றைய தினம் டெல்லியில் பல தலைவர்கள் செல்ல உள்ளதாக தெரிகிறது.
அந்த வரிசையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார். இன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரியாவிடை நிகழ்ச்சியில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொள்கிறார். மேலும் தமிழகத்தில் இருந்து பலரும் டெல்லிக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
