Connect with us

கோவை ஏதோ தனி மாநிலம் என்பது போல பழனிச்சாமி பேட்டி!: ஆர்.எஸ்.பாரதி

கோவை

தமிழகம்

கோவை ஏதோ தனி மாநிலம் என்பது போல பழனிச்சாமி பேட்டி!: ஆர்.எஸ்.பாரதி

கோவை ஏதோ தனி மாநிலம் என்பது போல பழனிச்சாமி பேட்டி!: ஆர்.எஸ்.பாரதி

கோவையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பேட்டி அளித்தார். அதேபோல் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இணைந்து வன்மையான கண்டனத்தை அளித்தனர்.

இதுகுறித்து ஆர்.எஸ்.பாரதி பெரும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதன்படி கோவை ஏதோ தனி மாநிலம் என்பது போல எதிர் கட்சி தலைவர் பழனிசாமி பேட்டி அளித்துள்ளதாக ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் கோட்டை கோவை என்பதை திமுக தகர்த்து விட்டதால் எடப்பாடி பழனிசாமி பயப்படுவதாக ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் செய்துள்ளார். திமுக மீது பொய்க் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்தியது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

9 மாவட்டங்களில் எப்படி நியாயமாக, நேர்மையாக, தேர்தல் நடந்ததோ அதே போலத்தான் நாளைய தினமும் நேர்மையாக தேர்தல் நடைபெறும் என்றும் அவர் கூறினார். ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை முழுமையாகக் கடைபிடித்து ஆணையம் தேர்தலை நடத்த பணியாற்றி கொண்டிருக்கிறது என்றும் கூறினார்.

வெளியூரைச் சேர்ந்தவர்கள் யார் என்ற பட்டியலை கொடுத்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறினார். தேர்தல் தோல்வி அடையப் போவதை எதிர்பார்த்து முன்கூட்டியே காரணங்களை பழனிசாமி கூறிவருகிறார் என்றும் அவர் கூறினார்.

கோவையில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெறும் என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top