வாக்குவங்கி அரசியல் செய்ததற்காக எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கேட்க வேண்டும் – அமமுக!

இன்றைய தினம் காலையில் உயர் நீதிமன்ற தீர்ப்பால் பாமகவினர் இடையே அதிருப்தி நிலவுகிறது. ஏனென்றால் கடந்த ஆட்சியில் அதிமுகவால் வழங்கப்பட்ட வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு ரத்து செய்தது.அமமுக

இதுகுறித்து அமமுக கட்சி நிர்வாகம் ,பழனிச்சாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி வாக்குவங்கி அரசியலுக்காக வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு அளித்த எடப்பாடிபழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அவசரகதியில் அள்ளித் தெளித்த கோலமாக வன்னியர்களுக்கு  ஒதுக்கீட்டை பழனிச்சாமி அரசு கொண்டு வந்தது என்றும் கட்சி நிர்வாகம் கூறியுள்ளது. சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு பழனிச்சாமி அரசு இந்த ஒதுக்கீட்டை அறிவித்ததும் குறிப்பிடதக்கது.

ஒதுக்கீட்டை குறித்து டிடிவி எழுப்பிய சந்தேகம் இப்போது உயர் நீதிமன்ற தீர்ப்பால் உறுதியாகியுள்ளது என்று அமமுக கட்சி கூறுகிறது. முந்தைய பழனிசாமி அரசு சுயநலத்தோடு வன்னியர் உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்ததாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் குற்றசாட்டு வைத்துள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகு அனைத்து சமூகங்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வலியுறுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment