பழனி முருகன் கோவில் – 200 கோடி நிதியுதவிக்கு உத்தரவு!

பழனி முருகன் கோவில் மேம்பாட்டு பணிக்காக சுமார் 200 கோடி நிதியுதவி திட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்ததாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

பழனி முருகன் கோவில் கும்பாவிஷேகம் 16 ஆண்டுகள் கழித்து வரும் ஜனவரி மாதம் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஒட்டுமொத்தமாக 16 கோடி அளவில் கற்களாலும் மற்றும் அலங்கார வேலைகள் அதற்காக செலவிடப்படுகின்றனர்.

5 கோடி அளவிற்கு வெள்ளி மற்றும் தங்கத்தால் ஆன பணிகள் நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்தமாக 88 பணிகள் நடைபெற்று வருகிறது.அதில் திருக்கோவிலின் மூலமாக 26 பணிகளும் மற்ற உபயதாரர்கள் மூலமாகவும் 62 பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் முழுமை பெற்று மக்கள் மகிழ்ச்சி பெரும் வகையில் திருக்கோவிலுக்கு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி கும்பாவிஷேகம் நடைபெறக்கூடிய தருணத்தில் நாம் உள்ளோம்.

செங்கல் சூளையில் தீ விபத்து: 9 பேர் உடல் கருகி பலி..!!

இந்த திட்டத்திற்கு தமிழக முதல்வர் சுமார் 200 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.