பழனி முருகன் கோவிலில் கும்பாபிசேகம்- சேகர் பாபு அறிவிப்பு

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று பழனி முருகன் கோவில். இந்த கோவில் அறுபடை வீடுகளில் ஒன்றாகும்.

இந்த முருகன் கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது.

தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசிக்கும் இந்த கோவில் தமிழ்நாட்டிலேயே அதிக வருமானம் வரும் கோவிலாக முதலிடத்தில் உள்ளது.

இந்த கோவிலுக்கு கும்பாபிசேக பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த கோவிலை இன்று ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கோவிலுக்கு கும்பாபிசேகம் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment