
தமிழகம்
பழனி முருகன் கோவில்: 2 நாள் உண்டியல் எண்ணிக்கை ரூ.2 கோடியை தாண்டியது!!!
பழனி கோயிலில் இரண்டு நாள் உண்டியல் காணிக்கை 2 கோடி கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள முருகன் கோவிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு சென்று வருவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் ஆடி மாதம் பிறந்து விட்டாலே பக்தர்களின் எண்ணிக்கையானது மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கோயில் உண்டியலில் பணம், தங்கம், வெள்ளி போன்றவற்றை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி வருகின்றனர்.
பின்னர் உண்டியல் நிரம்பியதும் கோயில் நிர்வாகம் காணிக்கைகளை எண்ணுவது வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக காணிக்கை எண்ணும் பணியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதன் படி, இரண்டு நாள் உண்டியல் காணிக்கை 2 கோடி மேல் அதிகமாக கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
