பழனி பக்தர்களே உஷார்!!! கைவரிசை காட்டும் திருடர்கள்…!!!

புரட்டாசி மாதம் வந்தாலே வழிப்பாட்டு தளங்களுக்கு பக்தர்கள் படையெழுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 3 வாரங்களாக பழனி முருகன் கோயிலில் பக்தர்களின் கூட்டமானது அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில் பழநி வரும் பக்தர்களிடம் திருடர்கள் அதிகமாக கைவரிசை காட்டுவதாகவும், இவற்றை தடுக்க சுற்றுலா பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

காலை 6 மணி முதல் 7 மணி வரை… பட்டாசு வெடிக்க நேரம் அறிவிப்பு..!!!

இதனிடையே சில தினங்களுக்கு பெங்களூரூவை சேர்ந்த பவன் செட்டி என்பவரின் கார் கண்ணாடியை உடைத்து பணம் மற்றும் பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதே போல் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டியை மர்ம ஆசாமி ஒருவர் தள்ளிச் செல்லும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

பெட்ரோல் குண்டு வீச்சு… பிஎஃப்ஐ நிர்வாகி வீட்டில் சோதனை..!!!

இதன் காரணமாக அடிவாரம் பகுதியில் சுற்றுலா பேருந்து நிலையங்கள், கிரிவீதிகளில் சந்தேகத்திற்குரிய நபர்கள் யாராவது இருக்கும்பட்சத்தில் அவர்களை கண்டறிந்து விசாரணை நடத்த வேண்டும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment