News
பாகிஸ்தான் அமைச்சர் முகம்மது குரேஷி “காபூல் பயணம்”!!!
தற்பொழுது உலகமெங்கும் அதிகமாக பேசப்படும் செய்தி என்றால் அதில் முதலில் கூறுவது ஆப்காணிஸ்தானில் தாலிபான்களின் வருகை ஆகும். ஏனென்றால் சில தினங்களாக ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது தாலிபான்கள். இதனால் அங்குள்ள மக்கள் அனைவரும் சிதறடிக்கப்பட்டு மேலும் பலரும் அந்நாட்டில் இருப்பதற்கு மிகவும் தயங்கி காணப்படுகின்றனர். மேலும் சில தினங்களுக்கு முன்பாக விமானங்களில் கூட அமர்ந்தபடி பயணம் செய்தனர்.
மேலும் இதற்கு அந்நாட்டு மக்கள் மிகவும் அச்சத்துடனேயே காணப்படுகின்றனர். இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் நிதி அமைச்சர் ஆப்கான் செல்வதாக கூறப்படுகிறது. அந்த படி பாகிஸ்தான் நிதி அமைச்சர் ஷா முகமது குரோஷி ஆப்கானிஸ்தானுக்கு நாளை செல்கிறார். மேலும் ஆப்கானில் அமெரிக்க படை விலகிய பின் தாலிபான்களின் முதல் வெளிநாட்டு விருந்தினராக குரேஷி காபூல் செல்கிறார்.
ஆப்காணிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சியை கட்டமைப்பதில் பாகிஸ்தான் முக்கிய பங்காற்றும் என தகவல். தாலிபான்களின் ஆட்சியை அங்கீகரிக்க உலக நாடுகள் தயக்கம் காட்டும் நிலையில் பாகிஸ்தான் அதற்கு தீவிர ஆதரவு தெரிவித்து வருகிறது. இம்ரான் கானின் சிறப்பு பிரதிநிதியாக பாகிஸ்தான் நிதியமைச்சர் குரேஷி செல்கிறார்.
