Connect with us

முதல் இன்னிங்ஸில் சொதப்பிய இங்கிலாந்து: ஆனால் பவுலிங்கில் அசத்தல்

Sports

முதல் இன்னிங்ஸில் சொதப்பிய இங்கிலாந்து: ஆனால் பவுலிங்கில் அசத்தல்

a6486cb319539727d5f15d1ae1defda1

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கடந்த 5ஆம் தேதி தொட்னக்கிய முதல் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் ஷான் மசூத் 156 ரன்களும், பாபர் அசாம் 69 ரன்களும் ஷதாப் கான் 45 ரன்களும் எடுத்ததை அடுத்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 326 ரன்கள் எடுத்தது

இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 219 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. யாஷிர் ஷா அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இதனையடுத்து 107 ரன்கள் முதல் இன்னிங்ஸில் முன்னிலையில் இருந்த பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

முதல் இன்னின்ங்சில் அபாரமாக விளையாடி 156 ரன்கள் எடுத்த ஷான் மசூத், இரண்டாவது இன்னிங்சில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். மேலும் அபித் அலி 20 ரன்களும், கேப்டன் அசார் அலி 18 ரன்களும், பாபர் அசாம் 5 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். இந்த நிலையில் சற்றுமுன் வரை பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 66 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இருப்பினும் அந்த அணி 173 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Sports

To Top