எங்கள் நாடு திவாலாகிவிட்டது என்பது உண்மைதான்: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல்..!

இலங்கையைப் போல் பாகிஸ்தானும் விரைவில் திவால் ஆகிவிடும் என்று கூறப்பட்ட நிலையில் எங்கள் நாடு திவால் நிலைக்கு சென்றது உண்மைதான் என பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் முகமத் அவர்கள் கூறிய போது சென்ற மாத இறுதியில் பாகிஸ்தானின் பணவீக்கம் 24.5% ஆக இருந்த நிலையில் தற்போது 30 சதவீதத்திற்கும் அதிகமாகிவிட்டது.

பாகிஸ்தானின் ஒரு லிட்டர் பால் விலை 250க்கும் இறைச்சி விலை 750க்கும் விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் ஏற்கனவே திவால் ஆகிவிட்டது என்றும் அதற்கு அரசியல்வாதிகள் அதிகாரிகள் உட்பட அனைவரும் தான் பொறுப்பு என்றும் நாங்கள் தற்போது திவாலான நாட்டில் தான் வாழ்ந்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பாகிஸ்தானின் பிரச்சனைகளுக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் தீர்வு இல்லை என்றும் நம் பிரச்சனைகளுக்கு நமது நாட்டிலேயே தீர்வு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.