பக்காவா ப்ளான் பண்ணி பிளேயரை இறக்கின பாகிஸ்தான்! இந்தியாவின் கதி?

இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கடந்த சில மாதங்களாகவே உற்சாகத்துடன் காணப்படுகின்றனர். ஏனென்றால் தற்போது தான் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிவு பெற்ற நிலையில் இன்று உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது.பாகிஸ்தான் அணி

இந்நிலையில் நாளையதினம் இந்தியாவின் போட்டியும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியா தனது முதல் போட்டியிலேயே வலிமை வாய்ந்த பாகிஸ்தான் அணியுடன் விளையாட உள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே போட்டி இருக்குமா? என்ற சர்ச்சைகள் எழுந்து நிலைமையில் நாளைய தினம் போட்டி இருக்கும் என்பதை உறுதி செய்யும் வண்ணமாக பாகிஸ்தான் அணி தற்போது தனது பிளேயர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்தியாவுக்கு எதிரான நாளை விளையாட உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியில் அதிரடி பேட்ஸ்மேன் பாபர், ரிஸ்வான், ஃபகார், ஹபீஸ், மாலிக், ஆசிப், இமாத் இடம்பெற்றுள்ளனர்.

ஷதாப், ஹசன், ஹாரிஸ், ஷஹீன், ஹைதர் ஆகியோரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து உள்ளனர். இதனால் நாளைய தினம் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எவ்வாறு விளையாடும் என்பதை பார்க்க ஆர்வத்தோடு ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment