Connect with us

சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரும் பாக்கியா! எந்த ஹீரோ படம் தெரியுமா?

WhatsApp Image 2022 07 25 at 1.54.00 PM

பொழுதுபோக்கு

சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரும் பாக்கியா! எந்த ஹீரோ படம் தெரியுமா?

சின்ன திரையில் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் மிகவும் முக்கியமானது, அதற்கென்ன தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். பல தொடர்களுக்கு மத்தியில் பாக்கியலட்சுமி தொடர் டிஆர்பியில் முன்னிலை பெற்று வருவதற்கு முக்கிய காரணம் நாயகி பாக்கியா தான்.

ஒரு குடும்பத்தை மையமாக வைத்து மாமனார், மாமியார் மூன்று குழந்தைகள் என இயல்பான வாழ்க்கை பாணியை கொண்டுள்ளது இந்தத் தொடர் பல மாதங்களை கடந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்த தொடரின் இவ்வளவு பெரிய வெற்றிக்கு முக்கியகாரணம் பாக்கியாவின் அப்பாவித்ததமான நடிப்பு தான். மிகவும் இறக்க குணம் கொண்டவராகவும் குடும்பம் மட்டும் உலகம் என வாழும் குடும்ப தலைவியாக நடித்திருப்பார் நடிகை சுசித்ரா.

download 2022 07 26T175156.131

இந்த நாடகத்தில் குடும்பத்தை மட்டும் இன்றி தனக்கு என ஒரு அடையாளம் வேண்டும் என தன்னால் இயன்றவரை போராடி சுயதொழிலையும் செய்து குடும்பத்தையும் எந்த குறைவில்லாமல் பார்த்துக்கொண்டு ஆல்ரவுண்டராக பாக்கியா நடித்திருப்பார்.

பாக்கியாவின் தத்துரூபமான நடிப்பு உண்மை என நினைக்கும் அளவிற்கு சிறப்பாக இருக்கும். இந்த சீரியல் சுசித்ராவிற்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தது மட்டுமின்றி தற்போது படவாய்ப்புகளையும் பெற்றுத் தந்துள்ளது.

download 2022 07 26T175209.621

தமிழ், கன்னடத்தில் உருவாகிவரும் புதிய படத்தில் பிரபுதேவாவின் அம்மாவாக பாக்கியலட்சுமி தற்போது கமிட்டாகியுள்ளார். இதன் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சந்திரமுகி 2 வில் இணைய உள்ள மற்றோரு ஹீரோயின்! யாரு தெரியுமா?

வெள்ளித்திரையில் பாக்கியாவை பார்க்க ஆர்வமாக இருக்கும் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top