சீரும் சிறப்புமாக நடைபெறும் பத்ம விருதுகள் வழங்கும் விழா! தமிழகத்திலுள்ள எத்தனை பேருக்கு பத்ம விருதுகள்?

நம் இந்தியாவிலேயே உயரிய விருதாக காணப்படுவது பாரதரத்னா விருது. இந்த விருதுக்கு அடுத்தபடியாக பத்ம விருதுகளில் உயரிய விருதாக காணப்படுகிறது. இந்த நிலையில் பத்ம விருதுகள் தற்போது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

அதன்படி டெல்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இதில் இந்திய குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

மறைந்த முப்படைகளின் தளபதியான பிபின் ராவத்திற்கான பத்ம விபூஷன் விருதை அவரது மகள்கள் பெற்றுக்கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்க்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிற்பி பாலசுப்பிரமணியத்திற்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை சேர்ந்த சிற்பி பாலசுப்பிரமணியத்திற்கு பத்மஸ்ரீ விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர்.

தமிழகத்தை சேர்ந்த சதீர் நடன கலைஞர் முத்து கண்ணம்மாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த கிளாரினெட் கலைஞர் ஏ.கே. சி. நடராஜன் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

இசைக்கலைஞர் பல்லேஷ் பஜந்தரிக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். ஹாக்கி வீராங்கனை வந்தனாவுக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment