Connect with us

128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு! தமிழ்நாட்டில் இருந்து 7 பேர் தேர்வு!!

பத்ம விருதுகள்

செய்திகள்

128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு! தமிழ்நாட்டில் இருந்து 7 பேர் தேர்வு!!

128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு! தமிழ்நாட்டில் இருந்து 7 பேர் தேர்வு!!

ரத்தம் சிந்தி சுதந்திரம் பெற்ற இந்தியா இன்றைய தினம் 73 வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறது. இதற்காக டெல்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கொடியேற்றினார்.

அதோடு மட்டுமில்லாமல் இன்றைய தினம் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி குடியரசு தின விழாவை முன்னிட்டு 2022 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகை சவுகார் ஜானகி, சுந்தர் பிச்சை ஆகியோர் தேர்வாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு பத்ம விருதுகள் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், ஒலிம்பிக் தங்க நாயகன் நிரஜ் சோப்ரா, நடிகை சௌகார் ஜானகி என பலரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

128 பேர்கள் கொண்ட பத்ம விருது பட்டியலில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் சேர்ந்தவர்கள்தான் இடம்பிடித்துள்ளனர். 13 பேர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள். நம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஏழு பேர் பட்டியலில் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஏ.கே.சி.நடராஜன், எழுத்தாளர் சிற்பி பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top