மழைக் காலங்களில் நெல் மூட்டைகள் நாசமடையாது! காரணம் செம திட்டம் அறிவிப்பு!!
தமிழகத்தில் இன்றைய தினம் தானிய மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. அதிலும் குறிப்பாக எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மழைக்காலத்தில் தானியங்கள் நாசம் அடைவதைப் பற்றி கேள்வி எழுப்பினர்.
இது குறித்து அமைச்சர் சக்கரபாணி விளக்கமளித்தார். அதன்படி ரூபாய் 70.75 கோடியில் நெல் சேமிப்பு தளங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் விளக்கமளித்தார். ரூபாய் 70.75 கோடியில் கான்கிரீட் தரை மற்றும் மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்பு தளங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
35000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 35 நெல் சேமிப்பு கலன்கள் திருவள்ளூர், மயிலாடுதுறையில் ரூபாய் 43.75 கோடி அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். தஞ்சாவூர் திருச்சியில் 53 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 44 தளங்களுக்கு மேற்கூரை ரூபாய் 25 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி கூறினார். இத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் மழை காலங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம் அடைவது தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
