படவேட்டம்மன் கோவில் – பாடி

484b84277c7b87a20e97a877888dbe65

அந்தக்காலத்தில் திருப்பதி ஏழுமலையானை வண்டி கட்டி கொண்டு தரிசித்து விட்டு வந்த சிலர் சாலையோரத்தில் ஒரு கல் உருண்டு போனதை பார்த்திருக்கிறார்கள் என்ன கல் என்று பார்க்கையில் அது சிரசு வரைக்குமான அம்மன் சிலை. அந்த சிலையை எடுத்து பார்த்து கொண்டிருக்கையில் அங்கு இருந்த சிறுமிக்கு அம்மன் அருள் வந்து ஆடி இருக்கிறாள்.

சோழமன்னனின் போர்ப்படையை காத்துக்கொண்டு இருந்த அம்மன் நான் படைவீட்டுல இருந்த அம்மன் நான், என் கோவில் காலப்போக்குல மறைஞ்சுட்டதால் எனக்கான இடத்தைத்தேடி இப்படி உருண்டு வந்துகிட்டு இருக்கேன். இன்னும் கொஞ்சம் தூரம் போனா சாலை ஓரத்தல ஒரு வேப்ப மரம் இருக்கும். அங்கே வைச்சு என்னை வழிபடுங்க. உங்க வேண்டுதலை நிறைவேற்றி என்றைக்கும் நான் துணை நிற்பேன். எல்லைத் தெய்வமாக இருந்து காப்பேன்”. என்று வாக்கு சொல்லியிருக்கிறது அம்மன்”.

அதனால் அங்கு இருந்த அம்மன் சிலையை எடுத்துவிட்டு புறப்பட்டவர்கள் அந்த சிறுமி சொன்ன அருள்வாக்கின்படி அருகில் இருந்த வேப்பமரத்தில் வைத்து வழிபட்டு வருகின்றனர்.

இன்றும் கோபுரம் இல்லாது அந்த வேப்பமரமே கோபுரமாக செயல்படுகிறது.

சென்னை பாடியில் உள்ள பிரதான கம்பெனியான டிவிஎஸ் லூகாஸ் அருகில் இந்த கோவில் உள்ளது.

கேட்டவரங்கள் அருளும் அம்பிகையாக மிக சக்தி வாய்ந்த கோவிலாக இந்த படவேட்டம்மன் கோவில் உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...