Connect with us

மீண்டும் வெடித்த “ரூட்டு தல” விவகாரம்: பச்சையப்பன் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு!!

Cut

தமிழகம்

மீண்டும் வெடித்த “ரூட்டு தல” விவகாரம்: பச்சையப்பன் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு!!

திருவள்ளூர் மாவட்டம் ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்ட நிலையில் மாணவர் ஒருவருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தொடர் விடுமுறை காரணமாக, தங்களுடைய சொந்த ஊருக்கு சென்று மாண்டவர் மீண்டும் கல்லூரிகளுக்கு படையெடுத்துள்ளனர்.

அந்த வகையில் தினேஷ் என்ற மாணவர் பச்சையப்பன் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்துள்ளார். இந்த சூழலில் மாநில கல்லூரி மாணவர்கள் திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் சரமாறியாக தாக்கியுள்ளன.

பின்னர் படுகாயமடைந்த மாணவரிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன் படி, மாணவர்கள் மத்தியில் ரூட்டு தல மோதல் இருந்து வந்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top