அருகருகே அமைந்த பச்சைமலை பவளமலை முருகன் கோவில்

ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிப்பாளையம் முக்கியமான நகரப்பகுதியாகும் இந்த நகரத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்த முக்கிய கோவில்கள் தான் பச்சை மலை பவள மலை முருகன் கோவில்கள் ஆகும்.

73ee4c4f351de3c51e97dd573907cf25

எந்த ஊரிலும் இல்லாத சிறப்பாக இந்த இரு கோவில்களும் மிக அருகருகே அமைந்துள்ளது.

பச்சைமலை பவளமலை எங்கள் மலை நாடு” என்ற சொல்லுக்கேற்ப இந்த இரண்டு மலை முருகன் கோவில்களும் இப்பகுதி மக்களால் காலம் காலமாக வழிபடப்பட்டு வருகிறது.

துர்வாச முனிவர் இந்த மலையில் தவம் இருக்கையில் அவருக்கு தியான நிலை கை கூடாமல் போகவே முருகனை நினைத்து வழிபடுகிறார் பச்சைமலையில் முருகன் துர்வாசருக்கு காட்சி அளிக்கிறார் அதனடிப்படையில் உருவான கோவில் ஆகும். இங்கு முருகனை மேற்கு நோக்கி பிரதிஷ்டை செய்கிறார்.

காலங்கள் செல்ல பாலமுருகனின் மகிமையை உலகம் மறந்தது. பூஜை மற்றும் திருப்பணி இல்லாமல் இருந்த இந்த கோவிலை குப்புசாமி கவுண்டர் என்ற பக்தர் இக்கோவிலின் மகிமையை அறிந்து. அவருக்கு ஜோதி வடிவாக அருளிய முருகன், தன் கோவிலை பராமரிக்குமாறு அவருக்கு அசரீரியாக ஆணை சொல்கிறார். அதை ஏற்று பூஜைகள் திருப்பணிகள் தொடங்கப்பட்டு கோவில் மிகப்பெரும் அளவில் கட்டப்பட்டு இப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல் அனைவருக்கும் தெரிந்த ஒரு கோவிலாய் இது உள்ளது.

அருகே பவளமலை முருகன் கோவில் உள்ளது அதைப்பற்றி நாளை பார்ப்போம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.