பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியானது

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களை வைத்து  முக்கியமாக சூர்யாவின் சிங்கம்,  கார்த்தியின் பருத்தி வீரன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த நிறுவனம் தான் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம்.

இந்த நிறுவனம் மாலை 6 மணிக்கு இன்று ஒரு அறிவிப்பு வெளியிடுவதாக ஒரு செய்தியை வெளியிட்டது அது பிக் அனவுன்ஸ்மெண்ட் என சொல்லப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தை ரஞ்சித் இயக்க தாங்கள் தயாரிப்பதாகவும் மிகப்பெரும் அறிவிப்பை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த படம் விக்ரமுக்கு 61வது படமாக வர இருக்கிறது. பா. ரஞ்சித், விக்ரம் கூட்டணியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளார்கள்.

மேலும்  ரஞ்சித் இயக்கிய முதல் படமான அட்டக்கத்தி திரைப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தான் வாங்கி வெளியிட்டது.

அதன் பிறகு இந்த நிறுவனத்துடன் ரஞ்சித் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment