Connect with us

மீண்டும் சோனியா காந்திக்கு தலைவர் பதவி: ப.சிதம்பரம் ஏமாற்றமா?

News

மீண்டும் சோனியா காந்திக்கு தலைவர் பதவி: ப.சிதம்பரம் ஏமாற்றமா?

0a0071f1a0e50a16bae6a511904eeeba

நேற்று டெல்லியில் பரபரப்பாக காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றததை அடுத்து இந்த கூட்டத்தில் புதிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திடீர் திருப்பமாக சோனியா காந்தியே இடைக்கால தலைவராக மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பார் என்று ஒருமித்த கருத்துடன் கூடிய முடிவு எடுக்கப்பட்டது. இதனால் புதிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி தேர்ந்தெடுப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ப.சிதம்பரம் அவர்கள் தேர்வு செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியது. காமராஜருக்கு பின்னர் ஒரு தமிழர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் போகிறார் என்பதை எண்ணி தமிழக காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்

ஆனால் அந்த மகிழ்ச்சி சிறிது நேரத்தில் தவிடு பொடி ஆகியது. சோனியா காந்தியை மீண்டும் இடைக்கால காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ப. சிதம்பரம் அவர்களுக்கும்ம் தனிப்பட்ட முறையில் ஏமாற்றம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது

இது குறித்து ப.சிதம்பரம் கருத்து கூறிய போது காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திற்கு பின்னர் கட்சிக்குள் எல்லாம் சரியாகிவிட்டது என்று என்னால் சொல்ல முடியாது. கட்சி என்று இருந்தால் பிரச்சனை இருக்கத்தான் செய்யும். ஆனால் இந்தப் பிரச்சினைகள் மூலம் விரைவில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று கூறியுள்ளார். புரிந்தும் புரியாமலும் அவர் கூறிய இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top