மீண்டும் சோகம்! 2 நாட்களுக்கு பின் சடலமாக கிடைத்த சிறுவன்..!!

சைதாப்பேட்டை அடையாற்றில் குளித்த சிறுவன் 18 மணி நேர போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் உன்னி கிருஷ்ணன். இவரது மகன் சாமுவேல். இவர் அருகில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினத்தில் சாமுவேல் உட்பட 3 சிறுவர்கள் அடையாற்றில் குளிக்க சென்றுள்ளனர்.

அடுத்த 3 மணி நேரம்! 7 மாவட்டங்களில் – வானிலை அப்டேட்!!

அப்போது சாமுவேல் நீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பதறிப்போன சிறுவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சிறுவனை தேடும் பணியில் ஈடுப்பட்டனர்.

இதற்கிடையில் இரவு முழுவதும் தேடிய நிலையில் சிறுவன் கிடைக்கவில்லை. இருப்பினும் ரப்பர் படகுகள் மூலம் 2-வது நாளாக சிறுவனை தேடும் பணியில் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

தற்போது 18 மணி நேரத்திற்கு பிறகு சிறுவன் உடல் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இன்று முதல் 21-ம் தேதி வரை… எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?

மேலும், சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சைதாப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.