காருக்குள்ளேயே ஆக்ஸிஜன் வசதி! பிரதமரின் பாதுகாப்புக்காக வாங்கப்பட்ட காரின் சிறப்பம்சங்கள்!!

ரஷ்ய அதிபரின் புட்டின் இந்திய வருகையின்போது பிரதமர் நரேந்திர மோடி சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பில் உள்ள காரில் சென்று இருந்தார். இந்த நிலையில் பிரதமர் பாதுகாப்புக்காக அதிநவீன கார் வாங்கப் பட்டதாக கூறப்படுகிறது.

மெர்சிடஸ் மேபேச்

பிரதமரின் பாதுகாப்புக்காக மெர்சிடஸ் மேபேச் 650 ரக கார் ஆகும். இது ஏகே 47  போன்ற துப்பாக்கியால் குண்டு மழை பொழிந்தாலும் காருக்கு எந்த சேதமும் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் முழு கட்டுமானமும் தரமான எஃகு மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. காரின் ஜன்னல் கண்ணாடிகளில் பாலிகார்போனேட் கோட்டிங் செய்யப்பட்டுள்ளது.

சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்து 15 கிலோ வெடி பொருட்களால் தாக்குதல் நடத்தினாலும் காருக்குள் அமர்ந்திருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஒருவேளை வாயுத் தாக்குதல் நிகழ்த்தினால் அதனை சமாளிக்கும் வகையில் காருக்குள் தனியாக ஆக்சிசன் வசதி அமைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் டாங்கி தீப்பிடித்து எரிவதை தடுக்க சிறப்பு தொழில்நுட்பமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த கார் ரூபாய் 12 கோடிக்கும் மேலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment