பெற்ற தாய் போலதான் அம்பிகை- நவராத்திரி ஸ்பெஷல்

நம்மை பெற்ற அப்பா , அம்மா இருவருமே நமக்கு முக்கியமானவர்கள்தான் அதில் மாற்றுக்கருத்தில்லை. என்னதான் அப்பா பாசமானவராக இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளமாட்டார். ஆனால் அம்மா பாசமழையில் உருகுவார் ஒரு வேளை சாப்பிடவில்லை என்றால் கூட துடித்துப்போய் விடுவாள். அப்பாவுக்கு நம் மேல் கண்டிப்பு கலந்த பாசம் இருக்கும். அம்மா நாம் செய்யும் எல்லா தவறையும் பொறுத்து தூக்கி எறிந்து விட்டு பெற்ற பிள்ளை என்பதால் நம்மை விட்டுக்கொடுக்க மாட்டார் பாசமழை பொழிவார்.

e687968bcfc078f8849c433a3abafa63

அம்பிகை வடிவமான பார்வதி, லட்சுமி, சரஸ்வதி மூன்று பேருமே நம்மை இந்த உலகுக்கு தந்த அம்மாக்கள்தான் யாராக இருந்தாலும் அவனுக்கு ஓரளவு வீரமும், அதிர்ஷ்டமும், சிறிதளவாவது ஞானமும் இருக்கும் இந்த மூன்றையும் நமக்குள் உட்செலுத்தி ஒரு தாயின் வயிற்றில் படைத்தவர்கள் இந்த அம்மாக்கள்.

பெற்ற தாய் ஆக இல்லாவிட்டாலும் நம்மை படைத்த தாய் . அம்மாக்களின் அன்பு எப்படியோ நாம் செய்யும் தவறு அனைத்தையும் மன்னித்து நமக்கு நல்வாழ்வு காட்டி நம்மை ஞானம் உள்ளவனாக செல்வம் உள்ளவனாக வீரம் உள்ளவனாக இந்த முப்பெருந்தேவியர் செய்கின்றனர். அம்மாவின் அன்பு எப்படியோ அதை போன்றதே அம்பிகையின் அன்பும் . நாம் ஏதாவது பணம் கேட்டால் அம்மாதான் ஏதாவது தேற்றி நமக்கு தருவார் நம்மை அதிகம் கஷ்டப்படவிடமாட்டார் பெற்ற தாய் அல்லவா அது போல படைத்த தாய்களான இவர்களுக்கும் நாம் செய்யும் நன்மை தீமை அனைத்தும் தெரியும் அதற்கேற்றார் போல் நமக்கு நன்மைகளை இவளை வாரி வழங்குவாள்.

நவராத்திரி நாளில் மட்டுமல்லாது எந்த நாளிலும் கோவிலில் அம்மனிடம் மானசீகமாக கேட்டுப்பாருங்கள் பேசிப்பாருங்கள். உங்கள் கஷ்டங்களை சொல்லி புலம்பி பாருங்கள் அந்த அம்பிகை உங்களிடம் கேட்பது போலவும் உங்களை பெற்ற தாயே உங்களிடம் உங்கள் கஷ்டங்களை கேட்டது போலவும் தோன்றும்.

நமக்கு கஷ்டங்களுக்கு செவி சாய்ப்பவள் அம்பிகை நவராத்திரி 9 நாட்களில் இரண்டு நாட்கள் மட்டுமே மீதம் இருக்கிறது.

இந்த இரண்டு நாளிலாவது அம்பிகையை மனமார துதித்து அம்பிகையிடம் மானசீகமாக வேண்டி நவராத்திரி நாளில் அம்பிகையின் அருள் பெறுங்கள் அடுத்த நவராத்திரிக்குள் உங்கள் வாழ்வில் ஓளி பொங்கட்டும் மங்கலம் தங்கட்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.