இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு, குணமடைந்தவர்களின் விவரம்!

சீனா நாட்டில் தோன்றி இன்று உலகமெங்கும் காணப்படுகின்ற நோயாக அமைந்துள்ளது கொரோனா வைரஸ். இவை இந்தியாவின் பெரும் முயற்சியால் கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும் ஆங்காங்கே இந்த நோய்த்தொற்று தென்படுகிறது.

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 5326 பேருக்கு கொரோனா  பாதிப்பு கண்டறியப்பட்டது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. கொரோனா  பாதிப்பு 3 கோடியே 47 லட்சத்து 46 ஆயிரத்து 838 லிருந்து, 3 கோடியே 47 லட்சத்து 52 ஆயிரத்து 164 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 8 ஆயிரத்து 43 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 41 லட்சத்து 87 ஆயிரத்து 17 இல் இருந்து 3 கோடியே 41 லட்சத்து 95 ஆயிரத்து 60 ஆக அதிகரித்துள்ளது.

குணமடைந்தோர் விகிதம் 98.39 சதவீதமாக காணப்படுகிறது. அதே சமயத்தில் உயிரிழப்பு விகிதம் 1.37 சதவீதமாக உள்ளது. இந்தியாவின் ஒரே நாளில் கொரோனாவுக்கு 453பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்தியாவின் கொரோனாவால் இறந்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 77 ஆயிரத்து 544 இல் இருந்து 4 லட்சத்து 78 ஆயிரத்து 7 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு 79 ஆயிரத்து 97 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்தியாவில்  138.34 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 7 கோடியே 98 லட்சத்து 90 ஆயிரத்து 231  தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment