அளவுக்கு அதிகமாக போதை பொருள்களை உட்கொண்டதால் நடிகர் ஒருவர் பிணமாக வீட்டில் கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
‘தி வயர்’ என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமானவர் மைக்கேல் வில்லியம்ஸ். இவர் பல ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று காலை நடிகர் மைக்கேல் வில்லியம்ஸ் தனது வீட்டில் பிணமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
இதனை அடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மைக்கேல் வில்லியம்ஸ் மரணம் குறித்து முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்டதில் அவர் அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் உட்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகவே அவரது உயிர் பிரிந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது
மறைந்த நடிகர் மைக்கேல் வில்லியம்ஸ் அவர்களுக்கு 54 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் பிரபலமான நடிகர் ஒருவர் போதைப்பொருள் பழக்கத்திற்கு உள்ளாகி அந்த போதைப்பொருள் காரணமாகவே உயிரிழந்த சம்பவம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
1966 ஆம் ஆண்டு பிறந்த மைக்கேல் வில்லியம்ஸ் பல படங்களில் நடித்துள்ளார் என்பதும் அவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. மைக்கேல் வில்லியம்ஸ் மறைவிற்கு ஹாலிவுட் திரையுலகினர் உள்பட பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்