வறுமையினால் திருட்டா? என்ன சொன்னார் தெரியுமா நம்ம தல: வெளியானது வலிமை டிரைலர்!

தமிழ் சினிமாவின் தல என்று அழைக்கப்படுபவர் நடிகர் அஜித் குமார்.நடிகர் அஜித் குமார் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் வினோத் இயக்கியுள்ளார். வலிமை திரைப்படத்தில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா பணியாற்றியுள்ளார்.

வலிமை திரைப்படம் எப்போது வெளியாகும் என்று நடிகர் அஜித் குமாரின் ரசிகர்கள் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக காத்துக் கொண்டுள்ளனர். அவர்களின் காத்திருப்புக்கு பலனாக அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகிக்கொண்டே இருந்தன.

வலிமை திரைப்படம் 2022 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.  இவ்வாறுள்ள நிலையில் தற்போது வலிமை படத்தின் டிரைலர் இணையதளத்தில் வெளியாகி வைரலாக பரவிக் கொண்டு வருகிறது. அதில் நடிகர் அஜித்குமார் பேசிய வறுமை பற்றிய டயலாக் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment