எங்கள் கைகள் கட்டப்பட்டு உள்ளது! வேண்டுமென்றால் உச்ச நீதிமன்றம் போங்கள்: உயர்நீதிமன்ற நீதிபதிகள்
அடுத்த மாதம் இந்தியாவில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் எப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.
ஒரு சிலர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தக்கூடாது என தடை விதிக்க மனு தாக்கல் அளிக்கின்றனர். இதுகுறித்து சென்னை ஹைகோர்ட் யாரும் எதிர்பாராத கருத்து ஒன்றரை கூறியுள்ளது.
அதன்படி எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன என்று கூறியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவு உள்ளதால் எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறினர். மனிதர்கள் அனைவரும் சேர்ந்து உச்சநீதிமன்றம் செல்வதென்றால் தாராளமாக செய்யலாம் என்றும் நீதிபதிகள் கூறினர்.
உயர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றால் விசாரித்து உத்தரவிடவும் தயார் என்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் நிலையில் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என்றும் ஹை கோர்ட் நீதிபதிகள் கூறினர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைப்பது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் ஹை கோர்ட் நீதிபதிகள் கூறினர். சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் போது உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்பது வியப்பாக உள்ளது என்றும் நீதிபதிகள் கூறினர்.
